5 மில்லியன் யூரோ அபகரிப்பு : ஸ்பெயின் இளவரசி மீது குற்றச்சாட்டு

Written by vinni   // February 8, 2014   //

cristinaவரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக ஸ்பெயின் நாட்டு இளவரசி நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

48 வயதான இளவரசி இன்பேண்டா கிறிஸ்டினா, தனது கணவர் இனாக்கி உர்டங்கருக்கு சொந்தமான வணிக நிறுவனங்களை கவனித்து வந்தார். அப்போது அந்நிறுவனங்களின் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக இன்பேண்டா கிறிஸ்டினா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரச குடும்பத்துடன் தொடர்புடைய அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிதி சுமார் 5 மில்லியன் யூரோக்களை அபகரித்துக்கொண்டு இளவரசியின் கணவர் இனாகி உர்டாங்கரின் தலைமறைவாகி விட்டார்.

அவரது அய்சூன் நிறுவனத்தில் இளவரசியும் பங்குதாரராக இருப்பதால் பால்மா டி மல்லோர்கா நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதி ஜோஸ் காஸ்ட்ரோ கடந்த மாதம் ஏழாம் தேதி கிறிஸ்டினாவுக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவை ஏற்று இளவரசி இன்பேண்டா கிறிஸ்டினா இன்று காலை 10 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அவரது வருகையையடுத்து பால்மா டி மல்லோர்கா நீதிமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வழக்கமான மரபுகளை மீறி விசாரணை கூடம் வரை இளவரசியின் கார் செல்வதற்கு விசேஷ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.