மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து பணியாளர்கள்

Written by vinni   // February 8, 2014   //

7180273465_b92c50b301_hஇங்கிலாந்து நாட்டில் காணப்படும் தேசிய மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து தேர்வு செய்யும் திட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அனுமதியின் மூலம் அங்கு காலியாக உள்ள 250 பணியிடங்கள் நிரப்பப்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இத்தகைய ஊழியர்களின் வேலை அனுமதி விசாவிற்கான விண்ணப்பத்திற்கும் இங்கிலாந்து பார்டர் ஏஜென்சியும் அனுமதி அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தத் திறமை கொண்டவர்கள் அதிகம் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து உதவிப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை மருத்துவ உதவியாளர்களின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக மருத்துவ உதவிப் பணியாளர்கள் கல்வி மற்றும் வளர்ச்சிப் பிரிவின் இயக்குனரான மார்க் விட்பிரெட் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தில் குறிப்பிட்ட அளவிலேயே இந்த உதவியாளர்கள் காணப்படுவதால் இங்குள்ள மற்ற ஆம்புலன்ஸ் சேவைகளுக்கும் இவர்களின் தேவை அதிகமாக உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மையம் பல்கலைக்கழகங்களில் இந்தப் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது, முன்னாள் ராணுவ அதிகாரிகளை இந்த சேவையை மேற்கொள்ளுமாறு ஆலோசனை அளிப்பது தவிர வெளிநாடுகளிலும் தங்கள் தேவைக்கான ஊழியர்களைத் தேடி வருகின்றது.

100 ஊழியர்களை நியமிக்க தங்களுக்கு விசா அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடும் இம்மையம் தேர்வுக்குப் பின்னர் குறுகிய காலப் பயிற்சி அளிப்பதன்மூலம் வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ முதல் உதவி அளிக்கமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.