உக்ரைனில் இருந்துரஷியாவின் சோஷி நகருக்கு விமானக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

Written by vinni   // February 8, 2014   //

lead_largeஉக்ரைனில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 110 பயணிகளும், விமான சிப்பந்திகளும் இருந்தனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது 45 வயது மதிக்கதக்க பயணி ஒருவர் எழுந்தார். அவர் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், விமானத்தை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ரஷியாவின் சோஷி நகருக்கு ஓட்டும் படியும் மிரட்டல் விடுத்தான்.

இந்த தகவலை காக் பிட் பகுதிக்கு சென்று விமானிகளிடம் கூறினான். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக அந்த கடத்தல்காரனிடம் தந்திரமாக நைசாக பேசிக் கொண்டே விமானத்தை இயக்கினர்.

ஆனால் அவன் விடாப் பிடியாக விமானத்தை ரஷியாவின் சோஷி நகருக்கு தான் ஓட்ட வேண்டும் என அடம் பிடித்தான். இதற்கிடையே விமானம் கடத்தல் முயற்சி குறித்து இஸ்தான்புல் விமான நிலைய அதிகாரிகளுக்கு சக விமானிகள் தெரிவித்தனர்.

அதன்படி விமானத்தை வானில் 4 மணி நேரம் ஓட்டியபடி இஸ்தான்புல் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினர். இதற்கிடையே தயாராக இருந்த மீட்பு படையினர் அந்த விமானத்தை சுற்றி வளைத்தனர்.

கடத்தல்காரனுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகளை வெளியேற்றினர். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதன் பின்னர் அதிரடிப் படையினர் உள்ளே புகுந்து விமானத்தை கடத்த முயன்றவனை கைது செய்தனர். அப்போது அவனுக்கு காயம் ஏற்பட்டது. அவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவனிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை. அவன் விமானத்தை கடத்த முயன்றது ஏன் என தெரியவில்லை. அவனிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

விமானி மற்றும் சிப்பந்திகளின் சாதுரியத்தால்தான் கடத்தலில் இருந்து விமானம் தப்பியதாக இஸ்தான்புல் கவர்னர் ஹுசேன் அவ்னி முத்லு பாராட்டினார்.


Similar posts

Comments are closed.