வெளிச்சக்திகள் இலங்கையில் பிரிவினையை தூண்டுகின்றன – கிரிஸ் நோனிஸ்

Written by vinni   // February 8, 2014   //

maxresdefaultஇலங்கையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பதிலாக வெளிச்சக்திகள் அங்கு பிரிவினையை தூண்டுகின்றன என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கிரிஸ் நோனிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்தில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது உரையாற்றிய அவர்,

இலங்கை மக்களை இன ரீதியாக, மத ரீதியாக பிரிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இலங்கை ஒற்றுமைப்படுவதன் மூலம் வெளிச்சகதிகளின் தலையீடுகளை தடுக்கமுடியும் என்றும் நோனிஸ் குறிப்பிட்டார்.

கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெற்றமையானது, பாரிய நன்மையை நாட்டு;க்கு பெற்றுக்கொடுத்துள்ளது என்றும் நோனிஸ் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.