த. தே கூட்டமைப்பின் பலம் வாய்ந்த குழுவை ஜெனிவாவுக்கு அனுப்ப வேண்டும் – ஆனந்தசங்கரி

Written by vinni   // February 8, 2014   //

anandasangariதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவானதொரு குழுவை ஜெனிவாவுக்கு அனுப்ப வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்பாவித் தமிழ் மக்களை பிறர் ஏமாற்றுவதை அனுமதிக்காமல் இருப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான குழுவொன்றை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான வழியில் அதன் கடமையை செய்வதற்கு, ஜெனிவாவுக்கு வலுவான குழுவொன்றை அனுப்ப வேண்டும் என்றும் தாம் இப்போது உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.