சர்ச்சையைக் ஏற்படுத்திய சிறுமியின் இடைவிடாத நடனம்…..

Written by vinni   // February 7, 2014   //

continue_dance_001.w245

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது, 15 வயது சிறுமி நான்கு மணிநேரம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடந்த ஜனவரி மாதம் 30ம் திகதியன்று இரவு நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் சீனாவின் புகழ்பெற்ற நடன நட்சத்திரமான யங் லிபிங்கின் உறவினர் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி வை கைகி, புத்தாண்டு நடனத்தை மேடையில் ஆடினார்.

நீண்ட வெள்ளை ஆடையில் மேடையில் தோன்றிய அந்தப் பெண், கடந்து செல்லும் நேரத்தையும், பருவ நிலை மாற்றங்களையும் குறிக்கும் விதமான நடனம் ஒன்றினை நான்கு மணி நேரம் இடைவிடாது சுழன்றபடி நடனமாடினார்.

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இந்த சிறுமியை இடைவிடாது நான்கு மணிநேரத்திற்கு சுழலவிட்டது குறித்து இணையதளத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

ஒரு விமர்சகர் இதனைக் கொடூரமானது என்று குறிப்பிட்டு தன்னைப் பொருத்தவரை அழகு என்ற அம்சத்திற்குப் பதிலாக வெறுப்பே தோன்றியது என்று தெரிவித்திருந்தார்.

மற்றொரு விமர்சகர் 15 வயது சிறுமியை இதுபோல் தொடர்ந்து சுழலவிட்டது தவறான மதிப்பையே அளித்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து சுழலவிடுவதன்மூலம் எதனைக் குறிக்க முடியும் என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார், இதுபோன்ற ஏராளமான விமர்சனங்கள் இந்‌த நிகழ்ச்சியை சாடியிருந்தன.

ஆனால், அந்த சிறுமியோ இந்த நடனம் தனக்கு அளிக்கப்பட்ட ஒருவகையான ஆன்மீகப் பயிற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய திறனை அறிய இது தனக்கொரு சவாலாக இருந்தது என்று தெரிவித்துள்ள அவர், எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற முடிகிறதா என்று முயற்சிப்பதுபோல் இதுவும் ஒரு முயற்சியாகும்.

இந்த வாய்ப்பினை அளித்ததன் மூலம் தன்னுடைய ஆன்மாவை சுத்தப்படுத்திக் கொள்ள உதவியதற்கு கடவுளுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Comments are closed.