நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா திணறல்

Written by vinni   // February 7, 2014   //

indiavsnewzealand-ss-5-12-1இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 329 ரன் குவித்தது. 30 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறிய நியூசிலாந்து அணியை வில்லியம்சன், கேப்டன் மேக்குல்லம் சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதம் அடித்தனர். மேக்குல்லம் 143 ரன்னுடனும், ஆண்டர்சன் 42 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. மேக்குல்லம் – ஆண்டர்சன் ஜோடி இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளியது. இதனால் நியூசிலாந்து அணியின் ரன் மளமள வென்று உயர்ந்தது. ஆண்டர்சன் 77 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆனார். அடுத்து வாட்லிங் (1 ரன்) வந்த வேகத்திலேயே வெளியேறினார். இவரது விக்கெட்டையும் இஷாந்த் சர்மா கைப்பற்றினார்.

அதன்பின் மேக்குல்லத்து டன் டிம் சவுத்தி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய மேக்குல்லம் இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு 2–வது இரட்டை சதமாகும். சவுத்தி 27 ரன்னிலும், சோதி 23 ரன்னிலும், வாக்னர் 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள். கடைசி விக்கெட்டாக பிரண்டன் மேக்குல்லம் அவுட் ஆனார். அவர் 224 ரன் எடுத்தார். இதில் 29 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும். நியூசிலாந்து அணி 503 ரன் குவித்தது. இஷாந்த் சர்மா 6 விக்கெட்டும், ஜாகீர்கான் 2 விக்கெட்டும், முகமதுசமி, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷிகர் தவான் களம் இறங்கினர். தொடக்கமே கடும் அதிர்ச்சியாக இருந்தது. போல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் 3–வது பந்தில் தவான் (0 ரன்) ‘டக்’ அவுட் அனார். அடுத்து களம் இறங்கிய புஜாரா (1 ரன்) அதே ஓவரில் கடைசி பந்தில் விக்கெட்டை பறி கொடுத்தார். அவர் விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் ஆனார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்தது.

அடுத்த அதிர்ச்சியாக வீராட்கோலியும் வெளியேறினார். 4 ரன் எடுத்திருந்தபோது டிம் சவுந்தியின் பவுன்சர் பந்தை எதிர்கொண்ட கோலியின் கையுறையில் பந்து பட்டு ஸ்லிப்பிடம் கேட்ச் ஆனது. அப்போது 10 ரன்னாக இருந்தது.

அதன்பின் முரளிவிஜய், ரோகித்சர்மா ஜோடி பொறுமையாக ஆடியது. முரளிவிஜய் 26 ரன்னில் வாக்னர் பந்தில் போல்டு ஆனார். அப்போது ஸ்கோர் 51 ரன்னாக இருந்தது. அடுத்து ரோகித்சர்மாவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. ரோகித்சர்மா அரை சதம் அடித்தார் இறுதியில் இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்தது.


Similar posts

Comments are closed.