குளிர்கால ஒலிம்பிக்கில் சர்வதேச கொடியுடன் இந்திய வீரர்கள் செல்வது அவமானம்: முன்னாள் வீராங்கனை வருத்தம்

Written by vinni   // February 7, 2014   //

India_Winter_Olympicரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இதையொட்டி இன்று இரவு பிரமாண்ட துவக்க விழா நடைபெறுகிறது. விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்களான சிவ கேசவன், நதீம் இக்பால் மற்றும் ஹிமன்ஷு தாக்கூர் ஆகியோர் இந்திய கொடியை ஏந்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, இந்திய ஒலிம்பிக் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றைய துவக்க விழாவின்போது, இந்திய வீரர்கள் மூவர்ணக் கொடிக்கு பதிலாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொடியுடன் அணிவகுத்து செல்வார்கள்.

இது நமக்கு அவமானம் என்று கூறிய முன்னாள் தடகள வீராங்கனை அஸ்வின் நாச்சப்பா, இப்போட்டியில் யார் பங்கேற்கிறார், யார் பங்கேற்கவில்லை என்பதைப் பற்றி அதிகாரிகள் கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

தேர்தலை முன்கூட்டியே நடத்தும்படி நாங்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் ஒருவரும் கேட்கவில்லை. அவர்கள் மிகவும் ஆணவம் கொண்டவர்கள். ஆனால் நமது தடகள வீரர்களால் நாம் பெருமைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதுபற்றி இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் டார்லோசன் சிங் கூறுகையில், “தேர்தலை நடத்தினால் சர்வதேச ஒலிம்பிக் குடும்பத்தில் தானாக இணையும் என்று அர்த்தம் அல்ல. தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொன்றையும் விசாரிப்பதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு குறைந்தது ஒரு மாதம் ஆகும். நாங்கள் சர்வதேச விதிமுறைகளை பின்பற்றுகிறோம். இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் தவறு நடக்கவில்லை. உண்மைகளை அறியாமல் பலர் பேசுகின்றனர்” என்று விளக்கம் அளித்தார்.

மீண்டும் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பில் இணைவதற்கு முயற்சி செய்யும் வகையில், வரும் 9-ம் தேதி தேர்தலை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.