இலங்கை விவகாரத்தில் பொறுமை தேவை : அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள்

Written by vinni   // February 7, 2014   //

imagesஇலங்கை விவகாரத்தில் பொறுமையை கடைபிடிக்குமாறு சர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் யுத்தத்தின் பின்னரான விடயங்களில் உலக சமூகம் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியமானது என பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கருணாதிலக்க ஹங்கேவத்த தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத பிடியிலிருந்து மீண்டுள்ள இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போதியளவில் கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருணாதிலக்க ஹங்கேவத்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஓர் அங்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நூற்றுக்கணக்கான பரிந்துரைகளை செய்துள்ளதாகவும் ஒன்றன் பின் ஒன்றாக இவை அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தள்ளார். ஆயுதம் ஏந்திய நபர்களை தண்டித்து ஒதுக்காமல், அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் மீள இணைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அநேகமான முன்னாள் போராளிகளுக்கு தொழிற் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் தொழில் வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக கருணாதிலக்க ஹங்கேவத்த தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.