‘செக்ஸ்’ வார்த்தைகளால் ஆபாச ‘எஸ்.எம்.எஸ்’ : பெண்ணுக்கு ஜெயில் தண்டனை

Written by vinni   // February 7, 2014   //

50a6b647-d67d-4927-b87f-8f774ec32290_S_secvpfஇங்கிலாந்தில் விபசாரத்துக்குஆள் பிடித்த பெண்ணுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் பகுதியை சேர்ந்த பெண் மிச்செலி சாப்பேன். இவர் ‘பேஸ்புக்’ இணைய தளத்தில் தனது தந்தை ராய் ஷாக்சன், மாற்றாந்தாய் லூசி ஆகியோர் பெயரில் கணக்கு தொடங்கினார்.

அவர்கள் பெயரில் தனக்காக விபசாரத்துக்கு ஆள் தேடினார். அதற்காக நூற்றுக்கணக்கானவர்களுக்கு ‘செக்ஸ்’ வார்த்தைகளால் ஆபாச ‘எஸ்.எம்.எஸ்’ அனுப்பினார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் மிச்செலி சாப்மேன்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.

எனவே, அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தனது தந்தை தன்னை 21 வருடங்களாக கண்டு கொள்ளவில்லை என்றும், அவரையும் தனது மாற்றாந்தாயையும் பழி வாங்கவே இது போன்று நடந்து கொண்டதாகவும் கூறினார்.

கைது செய்யப்பட்ட மிச்செல் சாப்மேன் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 20 மாதங்கள் ஜெயில் தண்டனை விதித்தது.

இங்கிலாந்து வரலாற்றிலேயே இதுபோன்ற வழக்கில் ஜெயில் தண்டனை பெற்ற முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.