இலங்கை மற்றும் ஈரான் புகலிடக் கோரிக்கையாளாகளை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் கோரிக்கை

Written by vinni   // February 7, 2014   //

ausஇலங்கை மற்றும் ஈரான் புகலிடக் கோரிக்கையாளாகளை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கை மற்றும் ஈரானைச் சேர்ந்த பத்து புகலிடக் கோரிக்கையாளர்களை விடுதலை செய்யுமாறு நான்கு அவுஸ்திரேலிய சட்;டத்தரணிகள் கோரியுள்ளனர்.குறித்த புகலிடக் கோரிக்கையாளாகள் நவுரு தீவுகளில் அமைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஜோர்ஜ் நியூஹவுஸ், ஜுலியன் பேர்ன்சயிட், டேன் மொரி மற்றும் ஜேய் வில்லியம்ஸ் ஆகிய சட்டத்தரணிகளே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமானதும், மனிதாபிமானத்திற்கு புறம்பானதுமான வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளளனர்.நவுரு தீவுகளின் உச்ச நீதிமன்றில் குறித்த சட்டத்தரணிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நியாயமற்ற வகையில் நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்திற்கு புறம்பான வகையில் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளனர்.

நவுரு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இது நவுருவின் அரசியல் சாசனத்திற்கு புறம்பானது எனவும் சட்டத்தரணி ஜோர்ஜ் நியூஹவுஸ் ( George Newhouse) தெரிவித்துள்ளார்.புகலிடக் கோரிக்கையாளர்களை கால வரையறையின்றி தடுத்து வைப்பதனை நவுரு அரசியல் சாசனம் அனுமதிக்காது என தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஓர் காலப்பகுதிக்கு அதாவது புகலிட கோரிக்கை பரிசீலிக்கப்படும் வரையில் தடுத்து வைப்பதனை அனுமதித்தபோதிலும், காலவரையறையின்றி தடுத்து வைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நவுரு தீவுகளின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து திருப்திகொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். சில வேளைகளில் வழக்கு விசாரணைகளில் பங்கேற்க தமக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகக் கூடுமென குறிப்பிட்டுள்ளார்


Similar posts

Comments are closed.