எங்களின் சொந்த பிரச்சனையில் வெளியார் தலையிட தேவையில்லை – ஜனாதிபதி

Written by vinni   // February 7, 2014   //

president_mahinda_rajapaksaஇலங்கையில் இடம்பெற்ற 30 வருடப் போரின் வடுக்கள் – தழும்புகள் – மாறுவதற்கு ஆகக் குறைந்தது 10 ஆண்டுகளாவது தேவை என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை நடைமுறைப்படுத்தி முடிப்பதற்கு இன்னமும் ஓர் ஆண்டு கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

‘இலங்கையின் நல்லிணக்கமும் மீள்கட்டுமானமும்’ என்ற தலைப்பில் இலங்கை அரசினால் காணொலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனமொன்றுக்குப் பணம் செலுத்திக் குறித்த காணொலி தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெனிவா அமர்வை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்தக் காணொலியிலேயே லலித் வீரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர் படையணிகளைப் பயன்படுதினர் எனவும்இ தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலைத் போரின் தாக்குதல்களை நடத்தினர் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கிக் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட ஒரு சில விடயங்களும் காணொலியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த கணொலியில் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீர துங்கஇ நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் சிறப்பாக நிறைவேற்றியுள் ளோம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நியாயபூர்வமாக நிறைவேற்றியுள்ளோம். எஞ்சிய பரிந்துரைகளை நிறை வேற்றுவதற்கு எமக்கு ஆகக் குறைந்தது ஒரு வருடமாவது தேவை.இந்த மாதிரியான சூழ்நிலையில் ஏதாவது நாடுகள் இதனை விடச் சிறப்பாக செயற்பட்டுள்ளனவா ?.அதை எமக்குக் காட்டினால் நாமும் அவ்வாறு செய்ய முடியும்.எங்களை விடச் சிறப்பாகச் செயற்பட்ட எந்த நாடுகளும் இல்லை என்பதே உண்மை என்றார்.

இலங்கையில் 30 வருட காலம் போர் இடம்பெற்றது.இதன் தழும்புகள் – வடுக்களை மாற்றுவதற்கு ஆகக் குறைந்தது 10 வருடங்களாவது தேவை. அந்தப் 10 வருடங்களில் இலங்கையில் நல்லிணக்கம் மலர்ந்திருக்கும்-என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே காணொலியில் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச‌ ­ இந்த விடயம் எனது பொறுப்பு. இது எங்களின் சொந்த விடயம். இதில் வெளியார் தலையிடத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் நடைமுறைகளைப் பிரயோகிப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். இந்தப் பிரச் சினைகளை மண்டேலா எவ்வாறு கையாண்டார் என்பதைக் கற்று வருகின்றோம்- என்று கூறியுள்ளார்.

இதில் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்­இ உள்ளுர் விசாரணையில் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். குற்றங்களில் ஈடு பட்ட படையினருக்கு நாம் தண்டனைகள் வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.