ஐக்கிய நாடுகள் அமைப்பு மீது குற்றச்சாட்டு

Written by vinni   // February 7, 2014   //

un tk 01அமெரிக்க அதிகாரிக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணை நிறுவனமான சர்வதேச குடிபெயர்வு அமைப்பு இந்த இரகசிய ஏற்பாடுகளை செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் இந்த இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச குற்றச் செயல்கள் தொடர்பிலான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீவன் ரெப், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசனும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் அபைம்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினேய் நான்டியின் அனுமதியுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அனுமதியை பெற்றுக்கொள்ளாது ஐக்கிய நாடுகள் அமைப்பு, முன்னாள் புலி உறுப்பினர்களுடன் அமெரிக்க அதிகாரிகளை சந்திக்கச் செய்தமை சட்டவிரோதமானது என பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகள் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது திரட்டப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முனைப்பு காட்டும் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.