இலங்கை செல்லும் நைஜீரிய அணி

Written by vinni   // February 6, 2014   //

Cricket_2நைஜீரிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சார்பில், உலக கிண்ண டிவிசன் 5 லீக் தொடர் மலேசியாவில் வரும் மார்ச் 4 முதல் 14 வரை நடக்கவுள்ளது.

இதற்கு தயாராகும் வகையில், ஐ.சி.சி யின் உறுப்பு நாடு நைஜீரிய அணி, முதன் முறையாக இலங்கை சென்று பிப்ரவரி 21 முதல் மார்ச் 3 வரை போட்டிகளில் பங்கேற்கிறது.

இதுகுறித்து நைஜீரிய கிரிக்கெட் கூட்டமைப்பின் ஆன்யேமா கூறுகையில், உலகின் டாப்–8 தரவரிசையில் உள்ள இலங்கை அணியுடன் விளையாடுவது மிகப்பெரிய சாதனை.

தவிர உலகின் முன்னணி வீரர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி தான் என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.