Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Note Pro 12.2

Written by vinni   // February 6, 2014   //

samsung_note_pro_002சம்சுங் நிறுவனமானது Galaxy Note Pro 12.2 எனும் புதிய டேப்லட்டினை எதிர்வரும் 13ம் திகதி அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.
இச்சாதனத்தின் புகைப்படத்தினை டுவிட்டர் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

12.2 அங்குல அளவு, 2560 x 1600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது Quad Core Snapdragon 800 processor மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளதுடன், சேமிப்பு நினைவகமாக 32GB அல்லது 64GB தரப்படுகின்றது.


Similar posts

Comments are closed.