வாடிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா கடும் கண்டனம்

Written by vinni   // February 6, 2014   //

un-logoவாடிகன் நிர்வாகம் திட்டமிட்ட முறையில் சில செயல்களை மறைத்து வருகிறது என ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.

சிறுவர்களின் உரிமை பாதுகாப்புக்கான ஐ.நா குழு, வாடிகன் நிர்வாகத்துக்கு விடுத்துள்ள கண்டன செய்தியில், சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் பாதிரியார்களை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே திருச்சபைக்குள் சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க விசாரணை ஆணைக்குழு ஒன்றை வாடிகன் நிர்வாகம் நியமித்தது, இந்த ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.