இரண்டாய் பிளந்து தரைமட்டமான சரக்கு கப்பல்

Written by vinni   // February 6, 2014   //

ship_french_coast_002பிரான்சில் கடல் சீற்றத்தால் சரக்கு கப்பல் ஒன்று இரண்டாய் பிளந்து சுக்கு நூறானது.
பிரான்சின் ஆங்கலெட் என்ற நகரத்திற்கு அட்லாண்டிக் கடலோர பகுதி வழியாக ஸ்பெயினிலிருந்து கச்சா எண்ணெய்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது கடலின் சீற்றம் காரணமாக ராட்சத அலை எழுந்ததால், கப்பல் நிலைதடுமாறி பாறையில் மோதியது.

எனவே கப்பல் இரண்டாய் பிளந்ததால், கச்சா எண்ணெயும் தண்ணீருடன் கலந்தது.

இக்கப்பலுக்குள் 127 எண்ணைய் பீப்பாய்களை தவிர வேறு கனமாக பொருள் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பயங்கர கடல் சீற்றத்தின் போது, இன்ஜின் பிரச்னையால் கப்பலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஹெலிகொப்டரின் மூலம் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றது என்றும், 14 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வடக்கு அட்லாண்டிக் கடலோரம் இருக்கும் 9 பகுதிகளுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சரக்கு கப்பல் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன் என அப்பகுதியின் மேயர் எஸ்பிலோண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.


Similar posts

Comments are closed.