கனடாவில் நடந்த சோக கதை!

Written by vinni   // February 6, 2014   //

schoolbus_accident_004கனடாவில் நடந்த பேருந்து விபத்தில் தாய் ஒருவர் பலியான சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கனடா சஸ்கற்சுவானில் பெண் ஒருவர் பாடசாலை பேருந்து ஒன்றினால் கொல்லப்பட்டார். அச்சமயம் அவரின் இரண்டு பிள்ளைகள் அந்த பேருந்தில் இருந்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று பாடசாலை பேருந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது பிக் அப் டிரக்குடனும், கால்நடை டிரெய்லர் ஒன்றுடன் மோதியதில் சுஸ்கற்சுவான், பிக்கர் என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 40வயதுடைய மொனிக்கா டோம்ஸ் என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் பேருந்தில் இருந்த 3 பிள்ளைகளும், சாரதியும் காயமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், பேருந்தில் இருந்த 3 பிள்ளைகளில் இருவர் டோம்சின் உறவுகள் என்பதை ஆர்சிஎம்பி உறுதிப்படுத்தி உள்ளது.

டோம்சின் 8வயதுடைய இரட்டை ஆண்குழந்தைகள் இருவரும் பேரூந்தில் இருந்த 3 பிள்ளைகளில் இருவராவர். 3 குழந்தைகளுக்கும் சிறிய வெட்டு உரசல் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். சாரதி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.