சந்திரிக்கா ஓர் அகம்பாவம் பிடித்த பெண்

Written by vinni   // February 6, 2014   //

santhirikaமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஓர் அகம்பாவம் பிடித்த பெண் என ஓர் பெளத்த பிக்கு குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினரான பெத்தேகம சமித தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சமித தேரர் ஆளும் கட்சியின் சார்பில் தென் மாகாணசபைக்கு போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரிக்கா தமது குடும்பத்தை அழிதத்து மட்டுமன்றி ஜனநாயகத்தையும் சீர்குலைத்தள்ளார்.

சந்திரிக்கா பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட கனவு காண்கின்றார்.

சந்திரிக்கா நாட்டை ஆட்சி செய்த காலத்தில் மக்களுக்கு இழைத்த துன்பங்களை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு சந்திரிக்கா துரோகம் இழைத்தார்.

ஜனாதிபதியை இழிவுபடுத்த எவருக்கும் அனுமதியளிக்க முடியாது என சமித தேரர் தெரிவித்துள்ளார்.

அக்மீம்மன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.