நிஷா பிஷ்வால் இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து ஜெனீவா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை

Written by vinni   // February 6, 2014   //

nishaஇலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து மத்திய மற்றும் தென் ஆசிய பிராந்தியத்திற்காக அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், ஜெனீவா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பிரித்தானியாவிற்கான விஜயத்தை முடித்துக்கொண்ட பிஷ்வால் தற்போது ஜெனீவாவில் உள்ள ராஜதந்திரிகளுடன் இலங்கை நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,

ஜெனீவாவில் கடமையாற்றி வரும் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை நிலைமைகள் குறித்து ராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது என பிஷ்வால் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.