அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்கள் பலரை நாடு கடத்தத் தீர்மானம் :

Written by vinni   // February 6, 2014   //

australian_flag_3அகதிகளாக கடல் மூலம் அவுஸ்திரேலியா சென்றடைந்தவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தமை யாவருக்கும் தெரிந்ததே. அவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்களை நேற்று இரவோடிரவாக கைது செய்து பலவந்தமாக இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பத்தகு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவைத் தெரிவிப்போம் என அவுஸ்திரேலிய அரசப் பிரதிநிதியொருவர் அறிவித்துள்ள சில மணித்தியாலங்களுக்குள் அங்கு தஞ்சம் கோரியிருந்த தமிழ் மக்கள் நாடுகடத்தப்படுவது குறிப்பிடத் தக்கது. பலவந்தமாகக் கைதானவர்கள் விமானம் மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருப்பதாகவும் தெரிகின்றது.


Similar posts

Comments are closed.