அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது – அரசாங்கம்

Written by vinni   // February 6, 2014   //

srilanka flgஅமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய ராஜதந்திரி தெவ்யாணி அமெரிக்காவில் துன்புறுத்தப்பட்டதாக வெளியான வீடியோ காட்சிகள் போலியானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது எனவும், பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் இலங்கை தொடர்பில் வெளியிட்ட ஆவணப்படம் உண்மையானது என குறிப்பிட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டுத் தன்மை அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ஊடகங்களில் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.சில தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களில் அடிப்படையில் இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.