வாலிபரை விழுங்கிய ராட்சத அலை……

Written by vinni   // February 5, 2014   //

man_sea_001.w245

ஸ்பெயினில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நபரை ராட்சத அலை ஒன்று அடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஸ்பெயினில் உள்ள துறைமுகம் ஒன்றில் அப்து என்ற நபர், மீன்பிடிக்கும் கப்பலை புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளார்.

புயலின் காரணமாக தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், அதை தாண்டிச் சென்றுள்ளார். அப்போது திடீரென பொங்கி எழுந்த அலை, குறித்த நபரை அடித்து சென்றது.

இதனை பார்த்த நபர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், விரைவாக மீட்டாலும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Comments are closed.