சச்சின் பாதி, ஷேவாக் பாதி கலந்த கலவை தான் “கோஹ்லி”

Written by vinni   // February 5, 2014   //

kohli_002சச்சின், ஷேவாக், டிராவிட் ஆகியோர் கலந்த கலவை தான் வீராட் கோஹ்லி என நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மார்ட்டின் குரோவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மார்ட்டின் குரோவ் கூறுகையில், இந்திய அணியை மறுகட்டமைப்பதில் கோஹ்லி கலங்கரை விளக்கமாக திகழ்கிறார்.

உண்மையான அணித்தலைவராக விளங்கும் நோக்கில் அவர் ஆட்ட நுணுக்கங்களை விரைவாக கற்றுக் கொள்கிறார்.

நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.

டிராவிட்டை போல தீவிரமாகவும், ஷேவாக்கை போல தைரியமாகவும், சச்சினை போல் அசாதாரணமாகவும் விளையாடுகிறார்.

அவரது தனித்திறமையே அவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அவர் பந்துகளை அடித்து ஆடும் அழகு வியப்பூட்டுவதாக அமைந்துள்ளதாகவும், அவர் ஆட்டத்தின் இயல்பை பிடித்துவிட்டால் எப்படிப்பட்ட பந்து வீச்சையும் சிதறடித்து ஓட்டங்களை குவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.