ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்!

Written by vinni   // February 5, 2014   //

10lakh_tips_002அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வந்த பெண் 3 ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் கலேடோனியா என்ற இடத்தில் பூனே கவுன்டி பேமிலி ரெஸ்டாரென்ட் உள்ளது.

அதன் உரிமையாளர் மாட் நெபியு கூறுகையில், கடந்த சில நாட்களாகவே வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. இங்கு உணவு சாப்பிட வந்த பெண், ஓட்டல் ஊழியர்கள் அமி சபானி(25), சாரா செக்கிங்கர்(23), அம்பர் கரியோலிச்(28) ஆகியோருக்கு செக்கில் கையெழுத்திட்டு டிப்ஸ் கொடுத்து விட்டு சென்றார் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அமி சபானி கூறுகையில், முதலில் செக்கை வாங்கிய போது ரூ.30 ஆயிரம் என்றுதான் நினைத்தோம். செக்கை வங்கியில் செலுத்திய போதுதான், எங்கள் 3 பேருக்கும் தலா ரூ.3.5 லட்சம் கொடுத்து சென்றது தெரியவந்ததாக கூறியுள்ளார்.

அந்த பணத்தை தனது படிப்புக்கு செலவிட உள்ளதாக சாரா செக்கிங்கர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார், இவர் ஏற்கனவே குற்றவியலில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிப்ஸ் கொடுத்த பெண் தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் ஓட்டல் உரிமையாளர் மாட் நெபியு அவர் பெயரை வெளியிடவில்லை.


Similar posts

Comments are closed.