இலங்கை சுதந்திர தினத்திற்கு உலக நாடுகள் வாழ்த்து

Written by vinni   // February 5, 2014   //

srilanka flgஇலங்கையின் சுதந்திர தினத்திற்கு உலக நாடுகள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளன. இலங்கையின் 66ம் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நேற்றைய தினம் நடைபெற்றது. பஹ்ரெய்ன் நாட்டின் பிரதமர் காலீபா பின் சல்மான் அல் காலீபா, சுதந்திர தின வாழ்;த்துக்களை அனுப்பி வைத்துள்ளார்.நாட்டில் சுபீட்சமும் சகவாழ்வும் ஏற்பட வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் யாவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, டுபாயின் பிரதமர் சேக் காலீபா பின் சயிட் அல் நாயானும், சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை, குவைட்டின் தேசிய அசம்பளி பேச்சாளர் மர்சூக் அல் கானிம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை சபாநாயகர் சமால் ராஜபக்ஷவிற்கு விசேட வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஜோர்தானிய மன்னர் அப்துல்லாவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளார்.பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியும் இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கட்டார் நாட்டு பிரதமர் சேக் அப்துல்லா பின் நாசர் பின் காலீபா அல் தானியும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்திகளை அனுபு;பி வைத்துள்ளார்.உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.


Similar posts

Comments are closed.