ஜனாதிபதியை மக்கள் பாதுகாக்க வேண்டும்: பசில் ராஜபக்ஷ

Written by vinni   // February 5, 2014   //

pasilநாட்டை காப்பாற்றிய ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை தடுப்பதற்காக, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெருன்பான்மை பலத்தை வழங்குமாறு அமைச்சர் பசில் ராஜபகஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

மகரகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டை காப்பாற்றிய ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை உங்களால் மட்டுமே தடுக்க முடியும்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தை மக்கள் வழங்கினால், அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக செயற்பட முடியாது.

ஜனநாயக நாட்டில் மக்கள் ஜனாதிபதியுடன் இருக்கும் போது அவருக்கு எதிராக எந்த நாடு நடவடிக்கைகளை எடுக்க விரும்புவதில்லை. இதனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்திலும் வெளிநாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட போவதில்லை என்றார்.


Similar posts

Comments are closed.