இலங்கை தொடர்பில்அதிருப்தியில் அமெரிக்கா

Written by vinni   // February 5, 2014   //

amaricaபெண்கள் விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க தூதுவர் கெத்தரின் ரசலுக்கு வீசா வழங்குவதை இலங்கை அதிகாரிகள் நிராகரித்தமை தொடர்பில் அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

குறித்த அமெரிக்க அதிகாரிக்கு வீசா வழங்குவதில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தமக்கு அறிவித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதிலும் உள்ள பெண்களை சமூக மற்றும் அரசியல் ரீதியாக மேம்படுத்துவதே கெத்தரின் ரசலுக்கு வழங்கப்பமட்டுள்ள பொறுப்பு என தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

கெத்தரின் ரசல் இந்த மாதம் 10 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார்.

இலங்கையில் நடந்த போர் காரணமாக பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கு ஏற்படும் அழுத்தங்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து அமெரிக்க தொடர்ந்தும் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.