சுதந்திர தினத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Written by vinni   // February 5, 2014   //

araiyampathi_arpadam_004இணைந்த சுகாதார கற்கை நெறியை மேற்கொண்டுள்ள பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பேராதனை கலஹா சந்தியில் நேற்று சுதந்திர தினத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இவர்களது போராட்டம் ஒருமாதங்களைக் கடந்த நிலையில் திங்கட்கிழமை நீதிமன்ற உத்தரவிற்கமைய அவர்கள் சத்தியாக்கிரகம் செய்த கூடாரம் அகற்றப்பட்டது.

இருப்பினும் அவர்கள் கலஹா சந்தியில் வீதியோரத்தில் அமர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.


Similar posts

Comments are closed.