வடக்கு மக்களை ஐரோப்பிய நாடுகள் மீண்டும் மனித கேடயமாக்குகின்றன – ஜனாதிபதி

Written by vinni   // February 4, 2014   //

mahinda-rajapkse1-e1352856364572ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை மீது சுமத்தப்படும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பெரும் அநீதி என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று கேகாலையில் நடைபெற்ற 66 வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் ஜெனிவாவில் கொண்டு இலங்கைக்கு எதிராக கொண்டு வர முயற்சிக்கும் யுத்த குற்றச்சாட்டுகள் சமாதானத்தை விரும்பாதவர்களின் செயற்பாடுகள் .நாட்டின் பிரிவினைவாதத்திற்கான அரசியல் நிகழ்ச்சி நிரலை வைத்திருப்பவர்களினால் வழங்கப்படும் தகவல்களை வைத்தே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்றும் கூறினார்.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்மொழிய இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருப்பதன் பின்னணியில் ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அன்று தமிழ் அரசியல்வாதிகளை படுகொலை செய்தமை உட்பட விடுதலைப்புலிகளால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி எவரும் பேசவில்லை என்று குறிப்பிட்டார்.

தொடந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வடக்கில் சுதந்திரத்தை அனுபவிக்கும் மக்களை மீண்டும் கேடயமாக்க சில மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் முற்படுகின்றன. இதனை வட பகுதி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களை காப்பாற்றுவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் என்றுதான் நாடுகள் மீது அவர்கள் கை வைப்பார்கள்.

தமிழ் மக்களுக்கு நாம் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது வேறு நாட்டிற்கு அடிமையாகவோ அல்லது கேடயங்களாக வாழ்வதற்கோ அல்ல என்று குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.