போராட்டத்திற்கு மத்தியில் மலர்ந்த காதல்

Written by vinni   // February 4, 2014   //

ukraine_love_002உக்ரேனை சேர்ந்த நபர் ஒருவர், தனது காதலியிடம் மிகவும் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

உக்ரேனில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜென்யா என்பவர், தனது காதலி நஸ்ட்யாவிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

சுதந்திர சதுக்கத்துக்கு அருகே உள்ள வீதியிலேயே கடந்த 2ம் திகதி தனது காதலை பற்றி கூறியுள்ளார்.

தலைக்கவசம், முகமூடி, குண்டு துளைக்காத ஆடை என அனைத்தையும் அணிந்து கொண்டு, ஒற்றைக்காலில் மண்டியிட்டு ஒலிபெருக்கி மூலம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார், உடனடியாக மிக மகிழ்ச்சியுடன் நஸ்ட்யா ஏற்றுக் கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் சமீபத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலேயே சந்தித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.