நாய்கள் தொல்லை ! அலறும் மக்கள்

Written by vinni   // February 4, 2014   //

russia_dog_002ரஷ்யாவில் நாய்கள் தொல்லை தாங்க முடியாமல் மக்கள் தினம் தினம் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் எங்கு பார்த்தாலும் தெருநாய்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

பகல் நேரங்களில் பஸ், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தோடு உலா வரும் இந்த நாய்கள், இரவு நேரங்களில் சுரங்கப்பாதைகளில் தஞ்சம் அடைந்து விடுகின்றன.

சுரங்க ரயில் பாதைகளிலும் இந்த நாய்கள் சகஜமாக வலம் வருகின்றன.

அதிலும் குறிப்பாக சாலை விதிகளை தவறாமல் பின்பற்றுக்கின்றன, பச்சை விளக்கு எரிந்தால் மட்டுமே சாலையை கடந்து செல்கின்றன.

இதுகுறித்த மக்கள் புகார்கள் அளித்தாலும், எவ்வித பலனும் இல்லாமல் போனது.

சில பகுதிகளில் மட்டும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

என்னதான் இருந்தாலும், தெருநாய்களை ஒன்றும் செய்ய முடியாது, அவைகளோடு வாழ பழகி கொள்ள வேண்டும் என பிராணிகள் நல அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.