மகனின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டிய கொடூர தாய்

Written by vinni   // February 4, 2014   //

mother_arrest_002அமெரிக்காவில் இறந்து போன மகனின் உடலை பல துண்டுகளாக வெட்டி, தெருவில் வீசிய தாயால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் டான்னா ஸ்கிரிவோ(வயது 59), மருத்துவதாதியாக பணிபுரிகிறார்.

இவரது மகன் ராம்சே ஸ்கிரிவோ(வயது 32) சமீபத்தில் இறந்துவிட்டார்.

ராம்சேவின் உடலை, சட்டவிரோதமாக மருத்துவமனையில் இருந்து எடுத்த வந்த டான்னா, பல துண்டுகளாக வெட்டி தெருவில் வீசிவிட்டார்.

இந்நிலையில் டெட்ராய்ட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சைனா டவுன்ஷிப்பில் உள்ள இரண்டு சாலைகளில் குப்பை போடும் பையில் மனித உடல் துண்டுகள் இருப்பதாக நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

குப்பை பை தவிர தெருவிலும் மனித உடல் உறுப்புகள் மற்றும் பை நிறைய துணி, கிழித்துப் போட்ட பேப்பர் ஆகியவையும் கிடந்ததை பொலிசார் பார்த்தனர்.

விரைந்து வந்த பொலிசார் அந்த பைகளை கைப்பற்றியதுடன், விசாரணை நடத்தி டான்னாவை கைது செய்தனர்.

இறந்து போன ராம்சே மனநோயால் பாதிக்கப்பட்டவர், எனவே டான்னா இறந்து போன ராம்சேவின் உடலை வெட்டினாரா இல்லை கொலை செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.


Similar posts

Comments are closed.