அழகை மெருகூட்ட வலியுடன் ஆபரேஷன் செய்து கொண்ட கடாபி

Written by vinni   // February 4, 2014   //

gadaffi_doctor_003மறைந்த லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபி, தனது அழகை மெருகூட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

லிபியாவில் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக, போராட்டக்காரர்களால் கடாபி கொலை செய்யப்பட்டார்.

இவர் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தன்னுடைய அழகை மெருகூட்டுவதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் ஆர்வம்காட்டி வந்தார் என அவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் லியசியா ரிபெயிரொஸ்ஸெ தெரிவித்துள்ளார்.

மேலும் தான் கொலை செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் மயக்க மருந்துகூட எடுத்துக் கொள்ளாமல் அழகு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.