ஐபோன் வெடித்தது! அமெரிக்காவில் பரபரப்பு

Written by vinni   // February 4, 2014   //

apple-iphone6அமெரிக்காவில் மாணவி வைத்திருந்த ஐபோன் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் மைனே பகுதியில் உள்ள கென்னெ பங்க்ஸ் நகரில் நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது, இங்கு படிக்கும் மாணவி ஒருவர் ஐபோனை எடுத்து வந்திருந்தார்.

தனது பையில் வைக்கப்பட்டிருந்த ஐபோன், திடீரென வெடித்து தீப்பிடித்தது, அத்துடன் அவளது ஆடையிலும் தீப்பிடித்தது.

இதனால் மாணவி கூச்சலிட்டதால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது, உடனடியாக ஆடையில் பிடித்த தீயை அணைத்தனர்.

இதில் மாணவியின் தொடையில் காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Similar posts

Comments are closed.