main_11630இலங்கையின் தமிழ் மக்கள் வெற்றிக்கொள்வதில் தமது கட்சி தோல்வியடைந்துள்ளதாக ஜே.வி.பியின் புதிய தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

உலகச் செய்தி சேவை ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான கைவிடப்பட்ட மற்றும் தவறவிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிக்கொண்டு முன்னேக்கி செல்ல வேண்டியது எனது பொறுப்பு.

ஜே.வி.பியின் மத்திய செயற்குழு 25 பேரை கொண்டதாக விரிவுப்படுத்தப்பட்ட போதும் சிங்களவர் அல்லாதவர்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதில் போதுமானதாக இல்லை.

ஜே.வி.பியின் மத்திய செயற்குழுவின் ராமலிங்கம் சந்திரசேகர் மட்டுமே சிங்களவர் அல்லாத உறுப்பினராக இருக்கின்றார். அத்துடன் சமன்மலி குணசிங்க மட்டுமே பெண்களை பிரிதிநிதித்துவப்படுத்துகிறார்.

இதனை விட தமிழ், முஸ்லிம் அங்கத்துவமும், பெண்களின் பிரிதிநிதித்துவமும் மத்திய செயற்குழுவிற்கு அவசியம். இதுவே எமது விருப்பமும் தேவையுமாக உள்ளது என்றார்.