ஒரு இலட்சம் பவுண்டுக்கு விற்பனை செய்யப்பட்ட போலி ஓவியம்

Written by vinni   // February 3, 2014   //

fake_painting_001ரஷ்யாவின் பெலராஸ் பகுதியில் கடந்த 1887ஆம் ஆண்டில் பிறந்த மார்க் சாகல் என்ற பிரபல ஓவியர் நவீன யுகத்தின் முன்னோடியாகக் கருதப்பட்டவர்.

இவர் பின்னாளில் பிரான்ஸ் நாட்டில் குடியேறி அங்கு 1985 ஆம் ஆண்டு இறந்தார். இவருடைய ஓவியங்கள் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிற்கு விற்கப்பட்டன. கலை உலகில் இவரது நற்பெயரைக் காப்பற்றும் வண்ணமாக இவரது பேரப்பிள்ளைகளே சாகல் குழு என்ற அமைப்பினை நிர்வகித்து வருகின்றனர்.

இங்கிலாந்தின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த மார்டின் லங்(63) என்ற தொழிலதிபர் கடந்த 1992 ஆம் ஆண்டு 1,00,000 பவுண்டு கொடுத்து இந்த ரஷ்ய ஓவியரின் ஓவியம் ஒன்றினை வாங்கியிருந்தார். 1909 -10 ஆம் ஆண்டுக்காலத்தில் வரையப்பட்டது என்று வாங்கப்பட்ட இந்த ஓவியம் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அவரது மகன் பிபிசியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அளித்தபோது அந்நிறுவனம் ஆய்விற்காக இந்த ஓவியத்தை சாகல் குழுவிற்கு அனுப்பியது.

சாகல் குழு இது போலியானது என்று அறிவித்தது. அத்துடன் நில்லாமல் பிரான்ஸ் நாட்டு விதிமுறைகளின்படி அந்த ஓவியத்தை எரித்துவிடப் போவதாகவும் இந்தக் குழு தெரிவித்துள்ளது.

ஓவியம் போலியானது என்ற குறிப்புடன் அதனைத் தன்னிடம் திருப்பி அளிக்குமாறும் அல்லது அதற்கான மதிப்பீட்டுத் தொகையைத் தனக்கு கொடுக்கவேண்டும் என்று மார்டின் லங் சாகல் குழுவிற்கு தகவல் அனுப்பிவிட்டு அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கின்றார்.

போலியான ஓவியம் என்பதற்காக அதனை எரித்துவிடும் அளவிற்கு தீவிரமான ஒரு முடிவை இந்தக் குழு எடுக்குமேயானால் பிற்காலத்தில் தாங்கள் வாங்கும் ஓவியத்தின் தன்மை குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் சாகல் குழுவை அணுகுவதற்கே யோசிப்பார்கள் என்றும் லங் தெரிவிக்கின்றார்.


Similar posts

Comments are closed.