தலைமுடியில் உருவான ஸ்வெட்டர்!

Written by vinni   // February 3, 2014   //

sweater_hair_005சீனாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் தனது தலைமுடியில் ஸ்வெட்டர் மற்றும் தொப்பியை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

சீனாவின் சாங்கிங் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஷியாங் ரென்சியன்.

இவர் தனது 34வது வயதில் இருந்து, தலைவாரும் போது சீப்பில் உள்ள முடிகளை தனித்தனி இழைகளாக சேகரிக்க தொடங்கினார்.

ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், அவரிடம் 1.10 லட்சம் இழைகள் இருந்தது.

இதனை கொண்டு ஒரு ஸ்வெட்டரையும், தன் கணவருக்காக ஒரு தொப்பியையும் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

இவர் தயாரித்துள்ள ஸ்வெட்டர் 382 கிராம் எடையும், தொப்பி 119 கிராம் எடையும் உள்ளது.


Similar posts

Comments are closed.