அதிபர் ஆசாத் ஆதரவாளரான ஷியா பிரிவு நபர் தலை துண்டித்து கொல்லப்படும் பரபரப்பு வீடியோ காட்சி வெளியீடு

Written by vinni   // February 2, 2014   //

847b6fea-4731-4941-b033-7440ae8f51e8_S_secvpfசிரியாவில் அதிபர் பஷர்அல்–ஆசாத் பதவி விலக வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

அதில் சுமார் 1¼ லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளனர்.

போராட்டம் இன்னும் முடிவுக்கு வராததால் வன்முறை சம்பவங்கள் பெருகி வருகின்றன. அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ஷியா பிரிவினர் உள்ளனர். எனவே சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் அல் கொய்தாவினருடன் சேர்ந்து படுகொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அண்டை நாடான ஈராக்கில் இருந்து சிரியா வந்து போராட்டக் காரர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிபர் ஆசாத் ஆதரவாளரான ஷியா பிரிவு நபர் தலை துண்டித்து கொல்லப்படும் பரபரப்பு வீடியோ காட்சி சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஒரு நபரை இழுத்து செல்லும் தீவிரவாதி தர தரவென புல் தரையில் இழுத்து சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்கிறான். அப்போது அவன் துடிதுடித்து இறப்பதை சக தீவிரவாதிகள் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்.

இந்த காட்சியை பார்த்து அங்கு கூடியிருக்கும் சிறுவர்கள் சிரித்து மகிழ்கின்றனர். கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சியை போட்டோ எடுத்தனர். இக்காட்சிகள் சுமார் 3 நிமிடங்கள் வீடியோவில் ஒளிபரப்பாகிறது.


Similar posts

Comments are closed.