செல்போன் கோபுரங்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலி

Written by vinni   // February 2, 2014   //

katrina-4மேற்கு விர்ஜினியா அருகேயுள்ள கிளர்க்ஸ்பக் பகுதியில் செல்போன் கோபுரங்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கிளர்க்ஸ்பக் பகுதியில் உள்ள 300 அடி உயரமுள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் பழைய பாகங்களை மாற்றி நவீன உபகரணங்களை பொருத்தும் பணியில் நேற்று பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இடுப்புகளில் தற்காப்பு பட்டைகளை கட்டியபடி கோபுரத்தின் 60 அடி உயரத்தில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தரையின் கடைக்காலை பெயர்த்துக் கொண்டு கோபுரம் கீழ்நோக்கி சரியத் தொடங்கியது.

எகிறி குதித்து தப்பிக்கவும் வழியின்றி, இடுப்பு பட்டையை கோபுரத்துடன் இணைத்து கட்டியிருந்த 2 பணியாளர்கள் கீழே விழுந்த கோபுரத்தின் அடியில் சிக்கி, உடல் நசுங்கி பலியாகினர். கீழே விழுந்த கோபுரம், அருகில் இருந்த மற்றொரு சிறிய செல்போன் கோபுரத்தின் கம்பி மீதும் விழுந்ததால் அந்த கோபுரமும் தரையை விட்டு பெயர்த்துக் கொண்டு கீழே விழ தொடங்கியது.

இதை கவனிக்காமல் அவ்வழியாக சென்ற தீயணைப்பு வீரர் மீது அந்த சிறிய கோபுரம் விழுந்து நசுக்கியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். பெரிய கோபுரத்துக்கடியில் சிக்கி படுகாயம் அடைந்த மேலும் 2 பணியாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Similar posts

Comments are closed.