கிரிக்கெட்டுக்கு அழிவு காலம்! இயான் சேப்பல்

Written by vinni   // February 2, 2014   //

ian_7டுவென்டி- 20 போட்டிகளால் கிரிக்கெட்டுக்கு பேரழிவு என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் டெஸ்ட்(5 நாள்), ஒருநாள் போட்டி(50 ஓவர்) மற்றும் டுவென்டி- 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் 3 மணிநேரத்திற்குள் முடியும் 20 ஓவர் போட்டியை தான் ரசிகர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள்.

துடுப்பாட்ட வீரர்கள் பந்தை சிக்சர், பவுண்டரிகளாய் அடிப்பதை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், இதனால் 20 ஓவர் போட்டிக்கு அதிக அளவில் ஆதரவு காணப்படுகிறது.

இது கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பேரழிவு என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 20 ஓவர் போட்டியில் பந்துகள் சிக்சர், பவுண்டரிகளாய் பறக்கிறது.

இந்தப் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, பேட்டிங்கும், பந்துவீச்சும் சமநிலையில் இருக்க வேண்டும்.

ஆனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்ற வகையில் மட்டுமே 20 ஓவர் போட்டி உள்ளது, பந்துவீச்சாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

இதே நிலை நீடித்தால் கிரிக்கெட் விளையாட்டுக்கு அழிவு காலம் தான், போட்டி மற்றும் பொழுதுபோக்குக்கு இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.