லண்டனில் ரூ.5 கோடி மதிப்புள்ள கடிகாரங்களை கொள்ளையடித்த மர்ம கும்பல்

Written by vinni   // February 2, 2014   //

epcp_1103_01_o+spyker_watches_db18_drophead_coupe_more+watchலண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெரு எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் ஒரு இடமாகும். இங்குள்ள ஒரு வாட்ச் கடையில் 3 மர்ம மனிதர்கள் ரூ.5 கொடி மதிப்புள்ள வாட்சுகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ஸ்போர்டு தெருவில் ‘சுவிட்சர்லாந்து’ என்ற பிரபல வாட்ச் கடை உள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்த கடைக்குள் திடீரென மூன்று மர்ம மனிதர்கள் நுழைந்தனர். அதில் ஒருவன் கையில் துப்பாக்கி வைத்திருந்தான். மற்ற இருவர் இரும்பியால் ஆன பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர். அவர்கள் கடையில் உள்ள ஊழியர்களை மிரட்டி கண்ணாடிகளை உடைத்து ஏராளமான வாட்சுகளை திருடிச் சென்றுவிட்டனர். அதன் மதிப்பு சுமார் 5 லட்சம் பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ.5 கோடி) இருக்கும் என கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ”கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதற்கான அறிகுறியில்லை. மேலும், ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்தனர். இதுவரை யாரையும் கைது செய்யவில்லை” என்றனர்.

இதை நேரில் பார்த்த மாணவி ஒருவர் ”இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். முகமூடியுடன் கடைக்குள் 3 பேர் வந்ததை என் கண்களால் பார்த்ததையே நம்பமுடியவில்லை” என்றார்.

 


Similar posts

Comments are closed.