தெற்கு சூடானில் ராணுவ மருத்துவமனைகளில் இந்திய மருத்துவர்களின் சேவை: ஐ.நா. பாராட்டு

Written by vinni   // February 2, 2014   //

13496003-grunge-flag-of-united-nations-image-is-overlaying-a-detailed-grungy-textureதெற்கு சூடானில் ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வரும் இந்திய மருத்துவர்களின் சேவை பாராட்டத்தக்கது என்று ஐ.நா. கூறியுள்ளது.

தெற்கு சூடானில் முகாமிட்டுள்ள ஐ.நா. அமைதிப்படை சார்பில் மலாக்கல் நகரில் இந்திய ராணுவ மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்த டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி வரை 976 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 134 முக்கிய அறுவை சிகிச்சைகளும் அடங்கும். தவிர, 23 பிரசவங்களும் பார்க்கப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

உலகின் புதிய நாடான தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீர் தலைமையிலான அரசுத் துருப்புகளுக்கும், முன்னாள் துணை அதிபர் ரீக் மாச்சர் தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதியிலிருந்து மோதல் நிகழ்ந்து வருகிறது.

இரு தரப்பு மோதலில் அப்பாவி மக்களும் பலியாகி வருவதைத் தடுக்கும் வகையில், ஐ.நா. அமைதிப்படை தெற்கு சூடானுக்கு அனுப்பப்பட்டது.

அங்கு அமைதிப்படையினர் முகாம் அமைத்து மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்த ஐ.நா. அமைதிப்படையில் இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த மோதலில் இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து விட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்நாட்டிலும், 1,25,000 பேர் வெளிநாடுகளுக்கும் புலம் பெயர்ந்துள்ளனர். டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த 2 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்


Similar posts

Comments are closed.