இந்தோனேசியாவில் எரிமலை குமுறல்: பள்ளி சிறுவர்கள் உள்பட 14 பேர் பலி

Written by vinni   // February 2, 2014   //

b2a7a6b5-df53-431b-b1f3-bbe5030e07bc_S_secvpfஇந்தோனேசியாவின் சினாபங்க் எரிமலை சனிக்கிழமை குமுறியதில் பள்ளிச் சிறுவர்கள் 4 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதியிலிருந்து 2.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுகமெரியா கிராமத்தின் சாலையோரத்தில் சாம்பல்களால் மூடப்பட்ட உடல்கள் கிடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 14 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டன. சிறுவர்கள் 4 பேரும் எரிமலையை வேடிக்கை பார்க்கச் சென்றபோது அதில் சிக்கிக் கொண்டது தெரிய வந்துள்ளது.

விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

“”இந்த எரிமலைச் சீற்றத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. எரிமலைக்கு அருகில் உள்ள பாதைகளில் அதிக அளவு வெப்பம் கொண்ட சாம்பல்கள் பரவிக் கிடப்பதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது” என்று தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நக்ரோஹோ தெரிவித்தார். இது, இந்தோனேசியாவில் சமீபத்தில் நிகழ்ந்த எரிமலைச் சீற்றங்களில் மிகவும் பயங்கரமானது என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Similar posts

Comments are closed.