சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாவது நாட்டை காப்பாற்ற நான் தயார் – ரணில்

Written by vinni   // February 2, 2014   //

Ranil wickramasingheவாழ்க்கை செலவு அதிகரிப்பு, கல்வி, சுகாதாரம மற்றும் சட்டத்தின் வீழ்ச்சி தொடர்பில் ஜனாதிபதியுடன் பகிரங்கமாக விவாதத்திற்கு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொட்டக்கவெல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்நாட்டுக்காக  சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாவது செய்ய வேண்டிய வேலைகளை செய்து நாட்டை காப்பாற்ற தயாராக இருக்கின்றேன்.

நாட்டு மக்களின் பிரச்சினைகளை ராஜபக்ச அரசாங்கம் ஜெனிவா மின்சார நாற்காலி என்ற போர்வையில் புறந்தள்ளி வருகிறது.

ஜனாதிபதி தயார் என்றால் அவருடன் இந்த விடயங்கள் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன்.

சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல போகின்றனர் என்று எவராவது கூறுவார்களாக இருந்தால், அவர்களுக்காக ஆஜராக நான் தயாராக இருக்கின்றேன். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக எப்படியான தீர்மானம் கொண்டு வரப்படும் என்பது எனக்கு தெரியாது.

ஆனால் ரோம் உடன்படிக்கையில் நான் கையெழுத்திடவில்லை என்பதால், இலங்கையில் உள்ள எவரையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது.

எவ்வாறாயினும் நாட்டு மக்கள் உணரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாத ராஜபக்ச அரசாங்கம், மக்களை பாரிய மின்சார நாற்காலியில் அமர வைத்துள்ளதுடன் அவர்கள் சத்தமிடும் போது, மது அருந்துங்கள், தூளை பயன்படுத்துங்கள் என்று கூறுகிறது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.