இலங்கை சர்வாதிகார நாடு: மங்கள சமரவீர

Written by vinni   // February 1, 2014   //

SamaraweeraLGஇலங்கை சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்து விட்டது எனவும் பெயரளவில் மாத்திரமே இலங்கை ஜனநாயக நாடு எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக நாடு என்பது பெயரளவிலானது. இந்தோனேசியாவின் சுகார்டோ, எகிப்தின் முபாரக் ஆகியோரின் ஆட்சியில் காணப்பட்ட சகல சர்வாதிகார அடையாளங்களும் இலங்கையில் தற்போது உள்ளன.

மாதம் தோறும் தேர்தல் நடத்துவதால் ஒரு நாடு ஜனநாயக நாடாகி விடாது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் காணப்படும் நவீன சர்வாதிகாரத்தின் அடையாளமாகவே தேர்தல் காணப்படுகிறது.

முபாரக் எகிப்தில் தொடர்ந்தும் தேர்தல்களை நடத்தினார். சிம்பாவே ஜனாதிபதி றொபர்ட் முகாபே தொடர்ந்தும் தேர்தலை நடத்தியே தெரிவு செய்யப்படுகிறார்.

ஊடக சுதந்திரம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள், வினைத்திறன், சுதந்திரமான தீர்மானங்களை எடுக்க நாடாளுமன்றத்திற்கு இருக்கும் இயலுமை ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால், இலங்கை ஜனநாயக நாடு அல்ல, சர்வாதிகார நாடு என்பது புலனாகும் என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.