யாஹு மின்னஞ்சல் கடவுச் சொற்கள் திருட்டு

Written by vinni   // February 1, 2014   //

emailதனது மின்னஞ்சல் வாடிக்கையாளர்களின் கணக்குகள் மற்றும் கடவுச் சொற்கள் திருடப்பட்டுள்ளதாக யாஹு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த தகவலை தனது இணையதள வலைப்பதிவில் யாஹு வெளியிட்டுள்ளது.

இருப்பினும், எத்தனை கணக்குகள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்து அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகள் ஆகியவற்றை முடக்குவதற்கான அபாயம் உள்ளது. இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக யாஹு தெரிவித்துள்ளது.

கூகுளின் ஜீமெயில் சேவையை அடுத்து, யாஹூவின் மின்னஞ்சல் சேவை உலக அளவில் இரண்டாம் இடம் வகிப்பதாக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் யாஹு நிறுவனத்துக்கு 27.3 கோடி மின்னஞ்சல் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.


Similar posts

Comments are closed.