தென்பகுதி மக்களுக்கு நினைவூட்டப்படும் மின்சார நாற்காலி!

Written by vinni   // February 1, 2014   //

mahinda-rajapkse1-e1352856364572ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உட்பட அரச தலைவர்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் சுமத்தப்படும் எனவும் அதன் பின்னர் ஜனாதிபதி மின்சார நாற்காலிக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அரசாங்கம் பிரசாரம் செய்து வருகிறது.

முக்கியமாக தேர்தல் நடைபெறவுள்ள மேல் மாகாணத்தில் வாழும் மத்திய வகுப்பு மக்களை இலக்கு வைத்து ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை மின்சார நாற்காலியை நினைவுப்படுத்தி வருகிறார்.

ஜெனிவா கூட்டத் தொடரில் இறுதியில் மேல் மற்றும் தென் மாகாணங்களின் தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த சூடான சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்பது புரிய ஆரம்பித்து விட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டுமாயின், அவருக்கு பெரும்பான்மையாக மக்களின் ஆதரவு இருப்பதை தேர்தலில் காட்ட வேண்டும் என அரசாங்கம் இறுதிக்கட்டத்தில் பிரசாரங்களை முன்னெடுக்கும்.

எவ்வாறாயினும், போர் நடைபெற்ற போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு இந்த மின்சார நாற்காலி பொருந்தது என்பது ஆச்சரியத்திற்குரிய விடயம்.

அவர் எதிர்க்கட்சி அரசியல்வாதி என்பதால், அவருக்கு இது பொருந்தாது என்பதும் ஆச்சரியப்பட வேண்டிய விடயமாக உள்ளது.

தேர்தல் காலத்தில் அபூர்வமான மின்சார நாற்காலி தொடர்பான தீ பற்றிக்கொள்ளும் எனவும் தேர்தலின் பின்னர் அது அணைந்து போகும்.

அதன் பின்னர் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை விரோத செயற்பாடுகள் எதுவும் அதற்கு தெரிவதில்லை என அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.