குழந்தையை வீசி எறிந்த பணிப்பெண்

Written by vinni   // February 1, 2014   //

killed_baby_worker_001அமெரிக்காவில் ஒன்றரை வயது குழந்தையை தரையில் வீசி கொலை செய்த பணிப்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார்(வயது 33), அவரது மனைவி தேன்மொழி.

தமிழகத்தைச் சேர்ந்த இவர்களது 19 மாத குழந்தை ஆதியன். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், கிஞ்ஜல் படேல்(வயது 27) என்ற பெண்ணை குழந்தையை கவனித்துக்கொள்ள அமர்த்தி இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 16ம் திகதி குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த படேல் குழந்தையை வேகமாக தரையில் வீசினார்.

இதில் குழந்தையின் தலையில் பலத்து காயமடைந்ததால், ரத்த வெள்ளத்தில் மிதந்தது.

இதனால் பயந்து போன படேல், சிவகுமாருக்கு போன் மூலம் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார், உடனடியாக வந்த சிவகுமார் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தும் எவ்வித பலனும் இல்லாமல் போனது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார், படேலிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் படேல் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார், குழந்தைக்கு பலத்த காயம் ஏற்படும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்த பெற்றோர்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.