தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றிய பாசக்கார மகன்கள்

Written by vinni   // February 1, 2014   //

man_buried_bike_004இறந்து போன தந்தையின் இறுதி ஆசையை அவரது வாரிசுகள் நிறைவேற்றியுள்ளனர்.

மத்திய மேற்கு அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம், மெக்கானிக்ஸ்னர்க் பகுதியை சேர்ந்தவர் பில் ஸ்டான்ட்லி.

சிறு வயது முதல் பைக் என்றால் ப்ரியமாக இருந்தவர், காலப்போக்கில் அதீத நாட்டம் கொண்டார்.

அதிவேகமாக செல்லும் மிக விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் என்ற மோட்டார் சைக்கிளை வாங்கி வீதிகளில் கலக்கி வந்தார்.

தான் இறக்கும் போது பைக்கில் அமர்ந்து கொண்டிருந்தவாறே புதைக்க வேண்டும் என ஸ்டான்ட்லி ஆசைப்பட்டார்.

இதை தனது மகன்களிடம் கூறவும், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவது என முடிவு செய்தனர்.

அதற்காக அதிக பாரத்தை தாங்ககூடிய கண்ணாடி பேழையை தயார் செய்ததுடன், தாயாரின் சமாதிக்கு அருகே 3 கல்லறைகளுக்கான இடத்தை முன்பதிவு செய்தனர்.

இந்நிலையில் நுரையீரல் புற்றுநோயின் பாதிப்புக்கு உள்ளான அவர், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 26ம் திகதி மரணமடைந்தார்.

இதனையடுத்து ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழை முழுவதையும் நறுமண தைலங்களால் நிரப்பினார்கள்.

பின் ‘ஹார்லி டேவிட்சன்’ நிறுவனம் 1967ம் ஆண்டில் தயாரித்த ‘எலெக்ட்ரா கிலைட்’ மொடல் பைக்கை கண்ணாடி பேழைக்குள் இறக்கி வைத்தனர்.

ரேஸ் வீரர்கள் அணிவதைப் போன்ற லெதர் ஜாக்கெட், ஹெல்மெட், கூலிங் கிளாஸ் சகிதமாக ஸ்டான்ட்லியை அமர்ந்த நிலையில் மோட்டார் சைக்கிளின் மீது வைத்து கட்டினர்.

பின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று கல்லறையில் புதைத்து தந்தைக்கு பிரியா விடை கொடுத்தனர்.


Similar posts

Comments are closed.